GST Activate — Suspend ஆ, Cancel ஆ?

உங்கள் GSTIN வேலை செய்யவில்லை என்றால், இரண்டில் ஒன்று — Suspend ஆகியிருக்கும் அல்லது Cancel ஆகியிருக்கும். இரண்டுக்கும் தீர்வு, டெட்லைன், அவசரம் எல்லாமே வேறு வேறு. எங்களை அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப் செய்யுங்கள் 70 9232 9232 — நிமிடங்களில் உங்களுடையது எது என்று சொல்கிறோம், அல்லது கீழே உள்ள வழிகாட்டியைப் பார்த்து நீங்களே சரிபார்க்கலாம்.

Suspension is a temporary automatic pause, cancellation is final and needs a formal revocation application
Table of Contents

என் GSTIN-ல் “Suspended” என்று காட்டுகிறது

பொதுவாக தற்காலிகமானது, பல சமயம் தானாகவே நடக்கும் — 1 டிசம்பர் 2022க்குப் பிறகு non-filing காரணமாக suspend ஆனவை, pending returns file செய்தால் சுமார் 15 நிமிடத்தில் restore ஆகும்.

Suspended GST-ஐ Activate செய்ய →

என் GSTIN-ல் “Cancelled” என்று காட்டுகிறது

Reverse செய்யாவிட்டால் இறுதியானது — officer cancel செய்த GSTIN-ஐ 90 நாட்களுக்குள் (270 நாள் வரை நீட்டிக்கலாம்) revoke செய்யலாம், ஆனால் நீங்களே voluntary-ஆக cancel செய்திருந்தால் மட்டும் முடியாது.

Cancelled GST-ஐ Reactivate செய்ய →

System-Generated vs Officer-Initiated Suspension

Rule 21A படி suspension ரெண்டு வகை — system-generated (Rule 21(2A), returns தொடர்ந்து file பண்ணாததால் automatic-ஆ REG-31 மூலம் trigger ஆகும்) அல்லது officer-initiated (REG-17 மூலம் SCN issue பண்ணி, 7 working days-க்குள் reply கேட்பாரு — REG-18). Suspension revoke ஆனா REG-20 order வரும், cancel ஆனா REG-19 order வரும்.

Rule 10A — புது Registration-க்கு ஒரு Trap

புதுசா GST register பண்ணவங்க, registration date-ல் இருந்து 30 நாட்களுக்குள் bank account details portal-ல் update பண்ணாட்டா, Rule 10A படி automatic-ஆ suspend ஆகும். இது experienced businesses-க்கு கூட தெரியாம போற ஒரு common trap.

Portal-ல் Status எப்படி Check பண்றது

GST portal-ல் login பண்ணி, “Services > Registration > Track Application Status” அல்லது “View Notices/Orders” section-ல் exact status, order date எல்லாம் தெரியும். “Suspended” nu இருந்தா, ARN number-உம் இருக்கும் — call பண்ணும்போது இது கிட்ட வெச்சிருங்க, process வேகமா ஆகும்.

உங்களுடையது எது என்று எப்படி தெரிந்துகொள்வது?

GST போர்ட்டலில் லாகின் செய்து, உங்கள் GSTIN-க்கு எதிராக காட்டப்படும் status-ஐ பாருங்கள் — “Suspended” அல்லது “Cancelled” என்று மட்டும் காட்டும், இரண்டும் ஒன்றாக காட்டாது. அந்த வார்த்தைதான் கீழே உள்ள எந்த வழிகாட்டி உங்களுக்குப் பொருந்தும் என்பதை தீர்மானிக்கிறது.

தெரியவில்லையா, போர்ட்டலில் தெளிவாக இல்லையா?

எங்களை அழையுங்கள் அல்லது வாட்ஸ்அப் செய்யுங்கள் 70 9232 9232 — உங்கள் போர்ட்டலில் exact-ஆ காட்டும் status-ஐ சொல்லுங்கள், எந்த process பொருந்தும், எவ்வளவு வேகமாக முடியும் என்று உடனே சொல்கிறோம். Google-ல் 5.0★ ரேட்டிங், 1,000+ reviews, 2017 முதல் சென்னை வணிகங்களுக்கு சேவை.

Suspension எல்லாமே automatic-ஆ ஆகுமா?

இல்ல, ரெண்டு வகை உண்டு — system-generated (non-filing காரணமா automatic) மற்றும் officer-initiated (REG-17 SCN மூலம், நீங்க 7 working days-க்குள் reply பண்ணனும்).

REG-20 Revoke ஆனப்பிறகு Continue பண்ண வேண்டியது

Suspension REG-20 மூலம் drop ஆனப்பிறகு, GSTIN active ஆகிடும் — ஆனா regular filing schedule-ஐ time-க்கு continue பண்றது தான் முக்கியம். Suspended period-ல எதாவது return pending இருந்தா, அதையும் file பண்ணி வெச்சிருங்க, இல்லனா அதே pattern மறுபடியும் flag ஆகலாம்.

REG-03 Clarification Query — Common Reasons

Suspension/cancellation resolve பண்ண apply பண்ணும்போது, officer REG-03 மூலம் clarification கேட்கலாம் — address proof document-ல name mismatch, uploaded photo தெளிவா இல்லாதது, bank account details registration-ல் இருக்கிற பெயருடன் match ஆகாதது போன்றவை common reasons. 7 நாட்களுக்குள் reply பண்ணனும்.

Suspension இல்லாம நேரடியா Cancellation — எப்போ நடக்கும்

பொதுவா suspension தான் முதல் step, ஆனா fraud/wrong-documents allegation (Section 29(2)(e)) மாதிரி serious cases-ல, officer suspension step-ஐ skip பண்ணி நேரடியா show-cause notice அனுப்பி cancellation-க்கு போகலாம். இதுல revocation-க்கு strictest scrutiny இருக்கும்.

GSTR-10 Final Return — Cancellation-க்கு பிறகு

Business இனிமே continue ஆகாதுனா, cancellation order date-ல் இருந்து 3 மாதத்துக்குள் GSTR-10 Final Return file பண்ணனும் — இல்லனா ₹200/day late fee (max ₹10,000), பிறகு GSTR-3A notice, Section 62 best-judgment assessment வரை போகும்.

Suspension vs Cancellation — Urgency வித்யாசம்

Suspension-ல் நேரம் இருக்கு, ஆனா cancellation-ல் fixed deadline இருக்கு — miss பண்ணா fresh registration தான். அதனால Suspended nu காட்டினா உடனே fix பண்றது நல்லது (escalate ஆகுறதுக்கு முன்னாடி), Cancelled nu காட்டினா revocation window immediately track பண்ணனும்.

Suspend/Cancel ஆனா Business Operations-ஐ எப்படி Manage பண்றது

GSTIN status resolve ஆகுற வரைக்கும், existing customers-க்கு status update பண்ணி வெச்சிருங்க, delivery timelines adjust பண்ணுங்க. Invoice raise பண்ண முடியாத காலத்துல புது orders accept பண்றதை careful-ஆ handle பண்ணணும் — commit பண்ணி பிறகு fulfil பண்ண முடியலனா, client relationship பாதிக்கும்.

Portal Error Messages — என்ன அர்த்தம்

“Registration Suspended” nu invoice generate பண்ணும்போது காட்டினா, temporary block. “GSTIN Cancelled” nu e-way bill generate பண்ணும்போது காட்டினா, final status — revocation இல்லாம முடியாது. இரண்டு message-உம் வேற வேற action require பண்றது.

CGST Rules-ல் Rule 21A suspension procedure-ஐ define பண்றது, Rule 22 cancellation procedure-ஐ define பண்றது. இரண்டும் Section 29-ஐ implement பண்றதுக்கான procedural rules — Suspension Section 29-க்கு interim step, Cancellation final outcome.

Suspend/Cancel Repeat ஆகாம இருக்க என்ன பண்ணனும்

Active ஆனப்பிறகு, returns-ஐ deadline-க்கு file பண்றது ஒரு habit-ஆ மாத்திக்கோங்க. GSTR-1-ம் GSTR-3B-ம் match ஆகுதான்னு ஒவ்வொரு மாசமும் double-check பண்ணுங்க, bank/address போன்ற registration details மாத்தினா உடனே portal-ல் update பண்ணுங்க. QRMP scheme-ல் இருந்தா quarterly-monthly deadlines-ஐ track பண்றது இன்னும் முக்கியம்.

Consultant Vெச்சு Handle பண்ணுறதோட மதிப்பு

Suspension-ஆவோ cancellation-ஆவோ, generic online guide follow பண்ணி self-handle பண்ணும்போது தப்பான process use பண்ணி narrow window waste ஆகும் risk அதிகம். உங்க exact GSTIN status சரிபார்த்து, சரியான form, சரியான documents, சரியான timeline-ல் apply பண்றது தான் ஒரே attempt-ல் resolve ஆகும் வழி.

Chennai-ல் இருக்கிற businesses-க்கு இது ரொம்ப common ஒரு situation — GSTIN status எதுவா இருந்தாலும், correct process-ஐ சரியான timeline-ல் follow பண்ணி resolve பண்றது தான் முக்கியம்.

சந்தேகம் இருந்தா, generic guide follow பண்ணாம நேரடியா அழையுங்க — free-ஆ status check பண்ணி சொல்றோம்.

Time தான் இங்க most important factor.

தொடர்புடைய வழிகாட்டிகள்

Call Now — 70 9232 9232